Posts

கடல்கன்னி ஹிசிகா

கடல்கன்னி ஹிசிகா தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நீ அனுபவிக்க வேண்டிய ராஜபோகத்தைத் துறந்துவிட்டு, நிகழ்காலத்தை மட்டுமன்றி உன் எதிர்காலத்தையும் நீ வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். உன்னைப் போல் பூஷணன் என்ற மன்னனும் தனக்குக் கிடைக்கவிருந்த ஐஸ்வரியங்களை தனது மதியீனத்தால் கை நழுவ விட்டான். அவன் கதையைக் கேள்!” என்று கதை சொல்லத் தொடங்கியது. வராககிரி, கூர்மகிரி ஆகிய இரண்டும் அடுத்தடுத்த ராஜ்யங்கள். வராககிரியை ஆண்டு வந்த பூஷணன் நல்ல குணமுடையவன். ஆனால் கூர்மகிரி மன்னன் மணிதரனோ அதற்கு நேர்மாறானவன்! நிர்வாகத்தை மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு, ராஜபோகத்தை அனுபவிப்பதிலேயே காலத்தைக் கழித்தான். அதனால் அவனுடைய படைபலம் குன்றியது. ஆனால் வராககிரி மன்னன் பூஷணனும், கூர்மகிரியின் மணிதரனும் நண்பர்களாகத் திகழ்ந்தனர். கூர்மகிரி ராஜ்யத்துக்கு உட்பட்ட கடற்கரையில் அமைந்திருந்த ரத்னகிரியில், சாமந்தன் என்ற இளம் வாலிபன்...

கடல்கன்னியை சிறைவைத்த மன்னன்

கடல்கன்னியை சிறைவைத்த மன்னன் அதற்குள், பூலோகத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த ஜலேந்திரன் கடலுக்குத் திரும்பினான். அங்கு ஹிசிகாவைக் காணாமல் தேடிஅலைந்து, அவள் பூலோகத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, ரத்னகிரியில் அவளைத் தேடியலைந்தான். இறுதியில் சாமந்தன் மூலம் அவள் மன்னரின் அந்தப்புரத்தில் சிறைப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டு, அவன் மணிதரனை சந்தித்தான். மன்னனிடம் ஹிசிகாவை விடுதலை செய்யுமாறு கெஞ்சினான். அவனுக்கு பதிலளிக்க விரும்பாமல் மணிதரன் தன் மந்திரியை நோக்கினான். மன்னனின் மனத்தைப் புரிந்து கொண்ட மந்திரி ஜலேந்திரனை நோக்கி, “ஜலேந்திரா! எங்கள் ராஜ்யத்தில் நிலத்தில் வசிப்பவர்களாயினும், கடலில் வசிப்பவர்களாயினும் அனைவரும் எங்கள் ராஜாவின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் ஹிசிகா மன்னரின் உடைமை!” என்றார். “மந்திரியாரே! உங்கள் மன்னரின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் நாங்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் மன்னரேயானாலும், தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கத்தில் குறுக்கிட அவருக்கு அதிகாரமில்லை” என்றான். “வார்த்தையை அளந்து பேசு! உங்கள் அந்தரங்கத்தில் மன்னர் குறுக்க...

கந்தர்வனின் சாபம்

கந்தர்வனின் சாபம் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்ளிருந்த வேதாளம், விக்கிரமனை நோக்கி, “மன்னா! இந்த நள்ளிரவில், இந்த பயங்கரக் காட்டில் நீ எதற்காக இத்தனை சிரமப்படுகிறாய் என்பது புரியவில்லை. யசோதரன் எனும் மன்னன் தனக்கு சிறிதும் தொடர்பே இல்லாத ஒரு கந்தர்வன் தனக்குக் கொடுத்த சாபத்தினால் மிகவும் துன்புற்றான். அந்த யசோதரனுடைய கதையைக் கூறுகிறேன், கேள்” என்று கதை சொல்லத் தொடங்கியது. நிஷாதபுரியின் மன்னன் யாசோதரன் தன் குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். ராஜ்யத்தின் எல்லையிலிருந்த காடுகளிலிருந்து கொடிய மிருகங்கள் அடிக்கடி கிராமங்களில் புகுந்து மக்களுக்கு இன்னல்கள் விளைவித்ததால், அவற்றை வேட்டையாடத் திட்டமிட்டு ஒருநாள் அவன் தன் பரிவாரங்களுடன் எல்லையோரக் காடுகளுக்குள் புகுந்தான். யசோதரன் வேட்டையாடிக் கொண்டிருக்கையில், வானிலிருந்து ஒரு கந்தர்வனும் ஒரு கந்தர்வப் பெண்ணும் மலையுச்சியில் இறங்கி சற்றே இளைப்பாற அமர்ந்தன...

செல்வம் வேண்டாமா?

செல்வம் வேண்டாமா? தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதைத் தோளில் சுமந்தவாறு மாயனத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் அவனிடம், “உன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. ஏனென்றால் நீயும் ராமநாதனைப் போலிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டு அடைந்ததை கை நழுவ விட்டு விடுவாய். அந்த ராமநாதன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள அரும்பாடுபட்டான். ஆனால் அது நிறைவேறிய பிறகு அதை அனுபவிக்காமல் தியாகம் செய்துவிட்டான். அந்த ராமநாதனின் கதையைக் கேள்!” என்று கதை சொல்லாயிற்று. மாயனூர் என்ற கிராமத்தில் ராமநாதன் என்ற இளைஞன் இருந்தான். ஒரு நாள் கிராமத்திற்கு வருகை தந்த சாமியார் ஒருவர் அவன் கை ரேகைகளைப் பார்த்துவிட்டு, “அதிருஷ்டம் உன்னைத் தானே தேடிவரும்” என்று சொன்னார். அதில் இருந்து ராமநாதன் வேலை செய்வதை விட்டு விட்டு தான் பணக்காரன் ஆவது பற்றியே எப்போதும் மனக்கோட்டைக் கட்ட ஆரம்பித்தான். ஒருநாள் அவனைத்தேடி வந்த வாலிபன் ஒருவன் “நான் சொல்லும் இடத்தில் ...

நல்ல பகைவன்

நல்ல பகைவன் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நமக்கு உதவி செய்பவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க நாம் பிரதியுபகாரம் செய்வதும் இயற்கை! இதை நமது சாஸ்திரங்களும் வலியுறுத்தி இருக்கின்றன. ஆனால் நான் உனக்கு இப்போது சொல்லப் போகும் கதையில் தனக்கு பேருதவி செய்தவருடன் பகைமை பாராட்டுமாறு ஒருவன் கருத்துக் தெரிவிக்க, அதை நன்கு கற்றுணர்ந்த அவனது குருவும் ஆமோதிக்கிறார். அந்தக் கதையை சற்று கேள்!” என்று வேதாளம் கதை சொல்லலாயிற்று. விஜயபுரியில் சரண்யன் என்ற பெரிய தனவந்தர் நற்குணங்கள் நிரம்பியவராகவும், தான, தர்மங்கள் செய்பவராகவும் இருந்தார். பல ஆண்டுகளாக அவருக்குப் புத்திர பாக்கியமே இல்லாமல் இருந்து அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நம்பி என்று பெயர் சூட்டி, அவனை நன்கு வளர்த்தார். நம்பி மற்ற சிறுவர்களைப் போல் இல்லாமல் மந்த புத்தியுடையவனாக இருந்தான். சா...

நாகரத்தினத்தை திருடியது நியாயமா?

நாகரத்தினத்தை திருடியது நியாயமா? தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா! தர்ம சிந்தனையோடு பிறருக்கு நன்மை செய்வதற்காக நீ மிகவும் சிரமப்பட்டு அடர்ந்த காட்டிலும் மேட்டிலும், பேயும் உலவ அஞ்சும் இந்த நள்ளிரவில் மயானத்தில் அல்லலுறுகிறாய். தருமமே வெல்லும் என்று சாஸ்திரங்கள் கூறினாலும், பெரும் பாலானவர்களின் விஷயத்தில் நயவஞ்சகமே வெல்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இதை நிரூபிக்கும் ஒரு கதையை நான் கூறுகிறேன், கேள்” என்றது. கடம்பவனம் எனும் கிராமத்தில் கண்ணன், ரங்கன் என்ற இரு மாடுமேய்க்கும் இளைஞர்கள் வசித்து வந்தனர். ஒரு நாள் மாலையில் ரங்கனுடைய மாடுகளில் ஒன்றைக் காணவில்லை. அதனால் அவன் கண்ணனைத் தன் மாடுகளை வீட்டிற்கு ஓட்டிப் போகச் சொல்லி விட்டு, தான் தொலைந்து போன மாட்டைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் சென்றான். மாலை மங்கும் நேரத்தில், தீடீரென ஒரு புலி எதிரே வர, ரங்கன் பயந்து போய் ஒரு மரத்தின் மீ...

பூலோகத்தில் கந்தர்வப் பெண்

பூலோகத்தில் கந்தர்வப் பெண் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிக் கொண்டு இருந்த உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனைப் பார்த்து, “மன்னா! உன்னைப் போல் விடாமல் முயற்சி செய்யும் சிலர் கடைசி நிமிடத்தில் தங்கள் கொள்கையைக் கைவிட்டு, அதுநாள் வரை செய்த முயற்சியை வீணாக்குகின்றனர். அத்தகைய ஒரு பெண்ணின் கதையை நான் உனக்கு இப்போது கூறப் போகிறேன். கவனமாகக் கதையைக் கேள்!” என்று கதை சொல்லலாயிற்று. வைசாலி ராஜ்யத்தில் திரிசங்கம் எனும் ஊரில் கலாதரன் என்ற ஒரு தெய்வீக சிற்பி வசித்து வந்தான். அவன் கல்லில் வடிக்கும் சிற்பங்கள் உயிருள்ளவைபோல் தத்ரூபமாக இருக்கும். ஒருநாள் இரவில் பௌர்ணமி நிலவொளியில் மொட்டை மாடியில் அவன் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய கனவில் மிக அழகான ஓர் இளமங்கை தோன்றி “சிற்பியே! என்னுடைய உருவச்சிலையை நீ கல்லில் செதுக்க வேண்டுமென நான் மிகவும் விரும்புகிறேன். என் ஆசையை நீ நிறைவேற்றுவாயா?” என்று கேட்டாள். அதிரூப சுந்தரியான ...